நோக்கு
தொழில்சார் நற்தன்மையினூடாக ஆயர்வேத சேவைகளில் மேம்பாடு.
செயற்பணி
தொழில்சார் அனுபவம் மற்றும் நல்லொழுக்கங்களின் ஊடாக பொது மக்களிற்கு ஆயுர்வேதத்தின் துறையிலே உச்ச சேவையினை பெற்றுக்கொடுத்து ஆயுர்வேதத் துறையில் நற்தன்மைமிக்க அபிவிருத்தியொன்றிற்குத் தேவையான சட்டரீதியான அடிப்படையினை பாதுகாத்தல்.
குறிக்கோள்
1961 ஆம் ஆண்டின் 31 ஆம் இலக்க ஆயுர்வேத சட்டத்தின் பிரகாரம் ஆயுர்வேதத் துறையில் நற்தன்மையில் அபிவிருத்தியினை உருவாக்குவதற்குத் தேவையான அறிவு, திறன் மற்றும் அனுபவமிக்க தொழில் புரிவோரிடம் சட்ட அதிகாரங்களைக் கையளித்தல், தொழில்சார் கௌரவம் மற்றும் நற்தன்மை என்பவற்றினை பாதுகாத்தல் என்பன எமது குறிக்கோளாகும்.
நோக்கங்கள்
- ஆயுர்வேதச் சட்டத்தின் ஒழங்கு விதிகளுக்கமைய தொழில்சார் நடவடிக்கைகள் தொடர்பாக ஸதாபிக்கப்பட்டுள்ள உயர் நியதிச் சட்டசபையினை தொழிற்பாட்டு ரீதியாக முன்னெடுத்துச் செல்லல்.
- ஆயுர்வேதத் துறையின் தொழில்சார் திறன்களை நிர்ணயித்தல் மற்றும் அதிகாரத்தைக் கையளித்தல்.
- ஆயுர்வேத சேவையினை நிறைவேற்றுகையில் தொழில்சார் நடத்தை பற்றிய நற்தன்மையினை பேணிவருதல். மேற்படி எதிர்பார்ப்புகளுக்கேற்ப நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குத் தேவையான வசதிகளை ஒழுங்கு செய்தல் மற்றும் நிறுவனசார் கட்டமைப்பினை ஒழுங்கு முறைப்படி அபிவிருத்தி செய்து பேணி வருதல்.
அறிமுகம்
1927 ஆம் ஆண்டு அரச மந்திர சபையின் துணைக் குழுவின் விதந்துரைகளின் பிரகாரம் 1928 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட சுதேச மருத்துவ சபையானது இலங்கையின் ஆயுர்வேதத் துறையில் முதலாவது சட்ட ரீதியான அதிகாரங்களைக் கொண்ட நிறுவனமாகும். பின்னர் 1935 ஆம் ஆண்டின் 46 ஆம் இலக்க இலங்கை ஆயுர்வேத மருத்துவ ஆலோசனை சபை கட்டளைச் சட்டத்தின் மூலம் தாபிக்கப்பட்ட ஆயுர்வேத மருத்துவ சபையானது 1941 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க சுதேச மருத்துவ கட்டளைச் சட்டத்தின் (1945 ஆம் ஆண்டின் 49 ஆம் இலக்க மற்றும் 1949 ஆம் ஆண்டின் 49 இலக்க திருத்தங்கள் செய்யப்பட்ட) ஏற்பாடுகளின் கீழ் மீள் நிறுவப்பட்டது. தற்போது நடைமுறையிலுள்ள ஆயுர்வேத மருத்துவ சபையானது 1961 ஆம் ஆண்டின் 31 ஆம் இலக்க ஆயுர்வேத சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட நியதிச் சட்ட நிறுவனமொன்றாகும். அதன் மூன்றாவது பிரிவில் 11(1) ஆம் பிரிவின் பிரகாரம் இந்த சபையானது பின்வருவோரை கொண்டிருக்கும்.
- ஆயுர்வேத ஆணையாளர்.
- கொழும்பு சுதேச மருத்துவ பயிற்சி நிறுவனத்தின் பணிப்பாளர்.
- கொழும்பு சுதேச மருத்துவ பயிற்சி நிறுவனத்தின் விரிவுரையாளர்களினால் அவர்களிலிருந்து தேர்தெடுக்கப்பட்ட இரண்டு அங்கத்தவர்கள்.
- அனுமதிக்கப்பட்ட ஒவ்வொரு ஆயுர்வேத கல்வி நிறுவனத்தினதும் விரிவுரையாளர்களினால் அவர்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அங்கத்தவர்.
- பதிவு செய்யப்பட்ட ஆயுர்வேத மருத்துவர்களினால் அவர்களிலிருந்து தேர்தெடுக்கப்பட்ட மூன்று அங்கத்தவர்கள் மற்றும்;
- அமைச்சரினால் நியமிக்கப்படும் 10 பேருக்கு மேற்படாத அங்கத்தவர்கள்.அவர்களில்,
- திவு செய்யப்பட்ட ஆயுர்வேத மருத்துவர்கள் அல்லாத நபர்களில் மூன்று பேருக்கு மேல் இவ்வாறு நியமித்தல் வேண்டும்.
- அகில இலங்கை ஆயுர்வேத மருத்துவ சம்மேளனத்தினால் பெயரிடப்படும் பத்து பேரினைக் கொண்ட சபையொன்றினால் பின்வருவோரில் இரண்டு பேரினை அவ்வாறு நியமித்தல் வேண்டும்.
- அகில இலங்கை ஆயுர்வேத மருத்துவ சம்மேளனத்தின் அங்கத்தவர்கள் அல்லாத பதிவு செய்யப்பட்ட ஆயுர்வேத மருத்துவர்களில் பின்வருவோரில் இரண்டு பேரினை அவ்வாறு நியமித்தல் வேண்டும்.
1961 ஆம் ஆண்டின் 31 ஆம் இலக்க ஆயுர்வேத சட்டத்தின் 11(1) பிரிவின் பிரகாரம் ஆயுர்வேத மருத்துவ சபையிடம் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் பின்வருமாறு.
- ஆயுர்வேதம் பற்றி கற்பிக்கும் யாதேனுமொரு நிறுவனம் இந்த சட்டத்தின் பணிகளுக்காக அமைச்சரினால் அனுமதியளிக்க வேண்டுமா என அமைச்சருக்கு சிபாரிசு செய்தல்,
- ஆயர்வேத மருத்துவர்களாக நபர்களின் பெயர்களை பதிவு செய்தல்.
- ஆயுர்வேத மருந்து கலவையாளர்களாக நபர்களின் பெயர்களைப் பதிவு செய்தல்.
- ஆயுர்வேத நோயாளர் பணிவிடை செய்யும் ஊழியர்களாக நபர்களின் பெயர்களைப் பதிவு செய்தல்.
- அவ்வாறு பதிவு செய்தவற்றினை இரத்துச் செய்தல் அல்லது இடைநிறுத்தம் செய்தல், மற்றும்
- ஆயுர்வேத மருத்துவர்கள், ஆயுர்வேத மருந்து கலவையாளர்கள்,ஆயுர்வேத நோயாளர் பணிவிடை செய்யும் ஊழியர்கள் ஆகியோரது தொழில்சார் நடத்தையினை முறைப்படுத்தல் மற்றும் நிருவகித்தல்.
- இந்த உறுப்புரையின் (அ) முதல் (ஊ) வரையான பந்திகளில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களில் யாதேனும் ஒன்றிற்காகவும் சட்டம் வரைதல்.