ஆயுர்வேத மருத்துவர்களாக நபர்களது பெயர்களை பதிவு செய்தல்
விண்ணப்பப் படிவங்களைப் பெற்றுக்கொள்ளல்
பட்டதாரி மருத்துவர்களை பதிவு செய்தல் (BAMS / BUMS / BSMS)
- விண்ணப்பக் கட்டணம் ரூ.250/= ஆகும். (தபால் மூலம் விண்ணப்பத்தினைப் பெற்றுக்கொள்வதற்கு தபால் கட்டணம் ரூ.85/-)
டிப்ளோமா மருத்துவர்களைப் பதிவு செய்தல் (DA / DAM) (ஆயுர்வேதம்/சித்தம்)
- விண்ணப்பக் கட்டணம் ரூ.250/= ஆகும். (தபால் மூலம் விண்ணப்பத்தினைப் பெற்றுக்கொள்வதற்கு தபால் கட்டணம் ரூ.85/-)
பாரம்பரிய மருத்துவர்களை பதிவு செய்தல் - 55 (1) (E) - பொது மருத்துவர்/ 55(2) விசேட மருத்துவர்
- விண்ணப்பக் கட்டணம் ரூ.250/= ஆகும். (தபால் மூலம் விண்ணப்பத்தினைப் பெற்றுக்கொள்வதற்கு தபால் கட்டணம் ரூ.85/-)
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தினை சமர்ப்பித்தல்
பட்டதாரி மருத்துவர்களை பதிவு செய்தல் (BAMS / BUMS / BSMS)
- மூல பிறப்புச் சான்றிதழின் உறுதிபடுத்தப்பட்ட பிரதியொன்று.
- உரிய பல்கலைக்கழகத்தினால் வழங்கப்படும் சித்தியடைந்தமைக்கான சான்றிதழ்.
- தேசிய அடையாள அட்டையின் போட்டோ பிரதியொன்று.
- ஆயுர்வேத மருத்துவ சபையினால் வழங்கப்படும் மருத்துவ சபை 01/05 படிவம்.
டிப்ளோமா மருத்துவர்களைப் பதிவு செய்தல். (DA / DAM) (ஆயுர்வேதம்/சித்தம்)
- மூல பிறப்புச் சான்றிதழின் உறுதிபடுத்தப்பட்ட பிரதியொன்று.
- உரிய பல்கலைக்கழகத்தினால் வழங்கப்படும் சித்தியடைந்தமைக்கான சான்றிதழ்.
- தேசிய அடையாள அட்டையின் போட்டோ பிரதியொன்று.
- ஆயுர்வேத மருத்துவ சபையினால் வழங்கப்படும் மருத்துவ சபை 01/05 படிவம்.
பாரம்பரிய மருத்துவர்களை பதிவு செய்தல் 55 (1) (E) - பொது மருத்துவர் / 55(2) - விசேட
- சகல விண்ணப்பதாரர்களும் தமது விண்ணப்பப் படிவத்துடன் பிறப்புச் சான்றிதழின் (மூலப் பிரதியினை) அனுப்புதல் வேண்டும்.
- பிக்கு ஒருவராயின் தமது பிறப்புச் சான்றிதழுடன் பதிவாளர் நாயகம் அலுவலகத்தினால் வழங்கப்படும் உபசம்பதா சான்றிதழை அல்லது பௌத்த அலுவல்கள் அமைச்சினால் வழங்கப்படும் பௌத்த பிக்குமாருக்கான அடையாள அட்டையுடன் பிக்குவாவதற்கு முன்னரான பெயரை உள்ளடக்கிய சத்தியக் கடதாசி ஒன்று. (உறுதிப்படுத்திய பிரதியொன்றினை அனுப்புதல் வேண்டும்.)
- மருத்துவ சபை இலக்கம் 01/01 - பாரம்பரிய ஆசிரியர் மருத்துவ சான்றிதழ்.
- மருத்துவ சபை இலக்கம் 01/02 - பாரம்பரிய மருத்துவத்தில் ஈடுபட்டிருந்தமை தொடர்பாக வழங்கப்படும் அனுபவம் பற்றிய சான்றிதழ் (சமாதான நீதவான் / விஹாராதிபதி / அரசாங்க பாடசாலை அதிபர் ஆகியோரில் யாரேனும் இருவரின் மூலம் மாத்திரம் பூர்த்தி செய்துகொள்ளல் வேண்டும்.
- மருத்துவ சபை இலக்கம் 01/03 - பிரதேச செயலாளரின் சான்றிதழ்.
- மருத்துவ சபை இலக்கம் 01/04 - விண்ணப்பதாரியின் தனிப்பட்ட தகவல்கள்.
- தேசிய அடையாள அட்டையின் உறுதிப்படுத்தப்பட்ட பிரதியொன்று.
பதிவு செய்யப்பட்ட ஆயுர்வேத மருத்துவர்களுக்கு அடையாள அட்டை வழங்குதல்
(குறித்த அடையாள அட்டையினை ஆயுர்வேத மருத்துவ சபை அலுவலகத்தில் இலவசமாகப் பெற்றுக்கொள்ள முடியும்.) முதலாம் முறை வழங்குதல்,
- பதிவுச் சான்றிதழின் உறுதிபடுத்தப்பட்ட போட்டோ பிரதியொன்று.
- அடையாள அட்டைக் கட்டணம் ரூ.1000/-
முன்னர் வழங்கியுள்ள அடையாள அட்டையொன்றைப் புதுப்பித்தல்
- முன்னைய அடையாள அட்டை.
- அடையாள அட்டைக் கட்டணம் ரூ.1000/-
வழங்கியுள்ள அடையாள அட்டை காணாமற் போயுள்ள சந்தர்ப்பத்தில்
- அடையாள அட்டை காணாமற் போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தல் செய்த முறைப்பாட்டின் பிரதி.
- அடையாள அட்டைக் கட்டணம் ரூ. 1,500/-
பதிவு செய்யப்பட்ட ஆயுர்வேத மருத்துவர்களின் மேலதிக தகைமைகளை சேர்த்தல்
(உரிய விண்ணப்பப் படிவத்தினை ஆயுர்வேத மருத்துவ சபை அலுவலகத்திடம் இருந்து இலவசமாகப் பெற்றுக்கொள்ள முடியும்.)
- பதிவேட்டில் உள்ளடக்க வேண்டிய மேலதிக தகைமைகள் அடங்கிய சான்றிதழின் உறுதிபடுத்தப்பட்ட பிரதியொன்று.
- ஆயுர்வேத மருத்துவ சபையின் பதிவுச் சான்றிதழின் உறுதிபடுத்தப்பட்ட பிரதியொன்று.
- தேசிய அடையாள அட்டையின் பிரதியொன்று.
- மேலதிக தகைமையினைப் பெற்றுக்கொண்ட விடயத்தினை உறுதி செய்யக்கூடிய வகையில் உரிய நிறுவனத்தினால் வழங்கப்படும் சான்றிதழின் பிரதியொன்று.
- மேலதிக தகைமையினை உள்ளடக்கிய முறையான சிங்கள சான்றிதழ் ஒன்றினை வழங்குவதற்கான கட்டணம் ரூ.3,000/=
- மேலதிக தகைமையினை உள்ளடக்கிய முறையான சிங்கள சான்றிதழுடன் அதன் ஆங்கில மொழியெர்ப்பு உட்பட இரண்டு சான்றிதழ்களையும் வழங்குவதற்கான கட்டணம் ரூ.5,500/-
- தபால் மூலம் சான்றிதழை பெற்றுக்கொள்வதற்கான தபால் கட்டணம் ரூ.100/=
ஆயுர்வேத மருத்துவர்களின் பதிவுச் சான்றிதழின் பிரதிகளை வழங்குதல். பெயரினை மாற்றம் செய்து சான்றிதழ் ஒன்றினை வழங்குதல்
- திருத்தம் செய்த பிறப்புச் சான்றிதழ்.
- திருத்தம் செய்யப்பட்ட தேசிய அடையாள அட்டையின் உறுதிபடுத்தப்பட்ட போட்டோ பிரதி.
- ஆயுர்வேத மருத்துவ சபையினால் இலவசமாக வழங்கப்படும் ஆ.ம.ச/பொது/04 மாதிரிப் படிவம்.
- பெயர் மாற்றக் கட்டணம் ரூ.2,500/= ஆகும். (தபால் மூலம் விண்ணப்பப் படிவத்தினை பெற்றுக்கொள்வதற்கு தபால் கட்டணம் ரூ.100/= ஆகும்.)
மெய்யுறுதிப்படுத்திய சிங்கள / தமிழ் சான்றிதழ் பிரதிகளை வழங்குதல்
- அடையாள அட்டை காணாமற் போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் பிரதி.
- குறித்த பதிவிலக்கத்தின் கீழான பதிவு செய்யப்பட்ட மருத்துவர் தாமே என்பதனை உறுதி செய்து சமர்ப்பிக்கும் சத்தியக் கடதாசி.
- ஆயுர்வேத மருத்துவ சபையினால் இலவசமாக வழங்கப்படும் A.M.C / பொது / 04 மாதிரிப் படிவம்.
- மெய்யுறுதிப்படுத்திய சிங்கள/தமிழ் சான்றிதழ்களின் பிரதிகளை வழங்குவதற்கான கட்டணம் ரூ.2,500/-ஆகும். (தபால் மூலம் விண்ணப்பப் படிவத்தினை பெற்றுக்கொள்வதற்கு தபால் கட்டணம் ரூ.100/= ஆகும்.)
ஆங்கில சான்றிதழ் பிரதிகளை வழங்குதல்
- பதிவுச் சான்றிதழின் உறுதிபடுத்தப்பட்ட போட்டோ பிரதி.
- ஆங்கில் சான்றிதழ் பிரதிகளை வழங்குவதற்கான கட்டணம் ரூ.2,500/= ஆகும். (தபால் மூலம் விண்ணப்பப் படிவத்தினை பெற்றுக்கொள்வதற்கு தபால் கட்டணம் ரூ.100/= ஆகும்.)
சர்வதேச சான்றிதழ்களை வழங்குதல்
- ஆயுர்வேத மருத்துவ சபையின் பதிவுச் சான்றிதழின் உறுதிப்படுத்தப்பட்ட போட்டோ பிரதியொன்று.
- மருத்துவ சபையினால் வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டையின் உறுதிப்படுத்தப்பட்ட போட்டோ பிரதியொன்று.
- தேசிய அடையாள அட்டையின் பிரதியொன்று.
- சர்வதேச சான்றிதழுக்கான கட்டணம் ரூ.5000/= ஆகும். (தபால் மூலம் விண்ணப்பப் படிவத்தினை பெற்றுக்கொள்வதற்கு தபால் கட்டணம் ரூ.100/= ஆகும்.)
பதிவு செய்யப்பட்ட ஆயுர்வேத மருத்துவர்களுக்கு சான்றிதழ் புத்தகங்களை வழங்குதல்
நேரடியாக வந்து பெற்றுக்கொள்ளும்போது
- மருத்துவ சபையினால் வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டை.
- மருத்துவ சான்றிதழ் புத்தகம் ஒன்றின் விலை ரூ.350/= ஆகும்.
தபால் மூலம் பெற்றுக்கொள்ளும்போது
- உரிய மருத்துவரின் வேண்டுகோள் கடிதம்.
- மருத்துவ சபையினால் வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டையின் போட்டோ பிரதியொன்று.
- மருத்துவ சான்றிதழ் புத்தகம் ஒன்றின் விலை ரூ.350/= ஆகும். ஒரு புத்தகத்திற்கான தபால் கட்டணம் ரூ.100/= ஆகும்.)
ஆயுர்வேத மருத்துவர்களின், ஆயுர்வேத மருந்து கலவையாளர்களின், ஆயுர்வேத நோயாளர்களுக்கு பணிவிடை செய்யும் ஊழியர்களின் தொழில்சார் நடத்தையை முறைப்படுத்தல் மற்றும் நிர்வகித்தல்.
ஆரம்ப கட்ட விசாரணைகளை மேற்கொள்ளல்
- பதிவு செய்யப்பட்ட மருத்துவர் ஒருவர் சார்பாக சட்ட ரீதியான முறைப்பாடொன்று கிடைக்கப் பெற்றதன் பின்னர் சபையின் அனுமதியின் பிரகாரம் ஆரம்ப கட்ட விசாரணையொன்று நடாத்தப்படும்.
குற்றச் சந்தர்ப்பங்கள் பற்றிய செயற்குழுவின் கவனத்திற்கு கொண்டுவருதல்
- ஆரம்ப கட்ட விசாரணைகளின் அறிக்கைகளின் பிரகாரம் சபையினால் தீர்மானிக்கப்பட்ட குற்றம் சாட்டப்பட்ட நபர் குற்றச் சந்தர்ப்பங்கள் பற்றிய செயற்குழுவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படுவார்.